தாலுகா வாரியாகநாளை பொது வினியோக குறைதீர் கூட்டம்
தேனி: பொது வினியோக திட்டத்தில் உள்ள குறைகளை களைவதற்காக தாலுகா வாரியாக குறைதீர் கூட்டம் நாளை(டிச.,14) நடத்தப்படுகிறது.
கூட்டம் சப்கலெக்டர், ஆர்.டி.ஓ., மாவட்ட அதிகாரிகள் தலைமையில் நடக்கிறது.
தேனி தர்மாபுரி ரேஷன்கடை, பெரியகுளம் எண்டபுளி ரேஷன்கடை, ஆண்டிபட்டி ரேஷன் கடை, உத்தமபாளையம் தென்பழனி ரேஷன்கடை, போடி பாலார்பட்டி ரேஷன் கடைகளில் குறைதீர் கூட்டம், நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான புகார்கள், குறைகள், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக மனுக்கள் வழங்கலாம். என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.