கரடி தாக்கியதில் விவசாயி காயம்
கூடலுார்: தேனி மாவட்டம் கூடலுார் கண்ணகிநகர் கோபால். இவர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி பெருமாள்கோயில் புலத்தில் இலவ மரங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார். நேற்று காலை 7:00 மணிக்கு நண்பர் ராமருடன் டூவீலரில் அங்கு சென்றார்.
டூவீலரை ரோட்டில் நிறுத்தி விட்டு இலவ மர தோப்பிற்கு இருவரும் நடந்து சென்ற போது புதருக்குள் மறைந்திருந்த 2 கரடிகளில் ஒன்று கோபாலை தாக்கியது. தப்பிய ராமர் அருகில் உள்ள விவசாயிகளை அழைத்து வந்து கரடியை விரட்டினர். கரடி தாக்கியதில் கோபால் முகம் சிதைந்தது. கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூடலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர். கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.