மனைவியை அடித்த கணவர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: மது போதையில் மனைவியை அடித்து காயப்படுத்திய உதயகுமாரை போலீசார் தேடுகின்றனர்.
பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டி காமராஜர் காலனியைச் சேர்ந்த உதயகுமார் 42. இவரது மனைவி மகாலட்சுமி 39. திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை
இதனால் உதயகுமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். மகாலட்சுமி உதயகுமாருக்கு அறிவுரை கூறினார். இதனை ஏற்க மறுத்த உதயகுமார் மது போதையில் மகாலட்சுமியை அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மகாலட்சுமி அனுமதிக்கப்பட்டார்.ஜெயமங்கலம் போலீசார் உதயகுமாரை தேடுகின்றனர்.