நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்து தீர்வு காணலாம்; தேனி நீதிபதி ர ஜினி தகவல்
தேனி; மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொது மக்கள் தங்களது சேவை குறைபாடுகளுக்கு தீர்வு பெற, மனுஅளித்து விரைவாக தீர்வு காணலாம்.’ என நீதிபதிரஜினி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: லட்சுமிபுரம் ஒருங்கிணைந்தநீதிமன்ற வளாகத்தில் நிரந்தர மக்கள்நீதிமன்றம் இயங்குகிறது. இந் நீதிமன்றத்தில் விமானம், சாலை, நீர்வழிப் போக்குவரத்து,பொருட்கள் கொண்டு செல்வதில் சேவை குறைபாடுகள், தபால், அலைபேசி சேவை குறைபாடு,உள்ளாட்சி அமைப்புகள், மின்வாரிய சேவை குறைபாடுகள், கல்வி நிறுவனங்கள் வீட்டு வசதி வாரியம், ரியல் எஸ்டேட் சேவை, மத்திய, மாநில அரசுகளின் சேவைகுறைபாடுகள் குறித்து எழுத்துப்பூர்வ மனு அளித்து, விரைவாகதீர்வு காணலாம்.
இந்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது மிகவும் எளிமையானது. சாதாரண வெண்மை நிறத் தாளில் எழுதி தாக்கல் செய்யலாம்.அதிகார வரம்புக்கான மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதனால் பொது மக்கள் தயக்கம் இன்றி நேரடியாகமனு அளித்து, பயன் பெறலாம்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.