தொழிலாளர்கள் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி; அமைப்பு சார தொழிலாளர்களாக பதிவு செய்து விபத்தில் காயம், மரணமடைந்த தொழிலாளர் குடும்பத்தினர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என தேனி தொழிலாளர் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்களில் யாரேனும் 2022 மார்ச் 31 வரை விபத்துக்களால் ஊனம், மரணம் அடைந்திருந்தால் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. ஊனம் அடைந்தவர்கள், மரணமடைந்தவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்கள் ஆதார், தொழிலாளரின் பதிவு எண், இறப்பு சான்று அல்லது ஊனம் அடைந்ததற்கான சான்று, எப்.ஐ.ஆர்., வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு தொழிலாளர் நல அலுவலகத்தில் நேரில் அணுகலாம் அல்லது 04545 250 853 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.