கிணற்றுக்குள் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
உத்தமபாளையம்; க. புதுப் பட்டியிலிருந்து ஊத்துக்காடு செல்லும் ரோட்டில் தனியார் பள்ளிக்கு அருகில் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றை மூட குப்பை, கட்டட இடிபாடுகளை கொட்டி வந்துள்ளனர்.
நேற்று காலை புதுப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த முனியாண்டி 60, டிராக்டரில் மண்ணை கொண்டு சென்று கொட்டியுள்ளார். அப்போது டிரைலர் சரிந்து கிணற்றுக்குள் டிராக்டருடன் கவிழ்ந்தது. டிரைவர் முனியாண்டியும் கிணற்றுக்குள் விழுந்து பலியானார். உத்தமபாளையம் – போலீசார் விசாரிக்கின்றனர்.