மறு வீடு சென்ற புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே கதிர் நரசிங்கபுரத்தைச்சேர்ந்தவர் பரமேஸ்வரன் 56, அரசு போக்குவரத்து கழக தேனி டெப்போவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் சௌமியா 24, பட்டப்படிப்பு முடித்து ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பாலாஜிக்கும் நேற்று முன்தினம் கம்பத்தில் திருமணம் நடந்தது.
இவர்களது குல வழக்கப்படி மணமக்களை மணப்பெண் வீட்டார் கதிர்நரசிங்கபுரத்திற்கு மறுவீடு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளனர்.
மாலை 6:00 மணிக்கு சௌமியா பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு படுக்கை அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. அவரது தந்தை உறவினர்கள் கதவைத் தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். சீலிங் பேனில் சேலையால் தூக்கிட்டு உள்ளார்.
பரமேஸ்வரன் கொடுத்த புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.