மீட்புப் பணிக்கு விழுப்புரம் புறப்பட்ட மின் வாரியத்தினர்
தேனி: விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை சீரமைக்க தேனியில் இருந்து 70 மின்வாரிய ஊழியர்கள் நேற்று புறப்பட்டனர்.
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ‘பெஞ்சல்’ புயலால் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களிலும் மின் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதன் சீரமைப்புப் பணிக்காக தென் மாவட்டங்களில் இருந்து மின் வாரியத்தினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட மின்வாரியத்தில் இருந்து பெரியகுளம், சின்னமனுார், தேனி மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் 70 மின் வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். விழுப்புரத்தில் இன்று முதல் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.