18 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு
தேனி: தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார்.
தேனி மாவட்டத்தில் 18 இடங்களில் மருந்தகங்கள் செயல்பாட்டிற்கு வந்தன.
தேனி சமதர்மபுரத்தில் நடந்த மருந்தகம் திறப்பு விழாவிற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார்.
எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். இந்த மருந்தகத்தில் பிற மருந்தகங்களை விட விலை குறைவாக கிடைக்கும்.
மாவட்டத்தில் 10 கடைகள் தொழில் முனைவோர் மூலமாகவும், 8 கூட்டுறவுத்துறை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேனி 4, பெரியகுளம் 3, போடி 1, ஆண்டிபட்டி 3, உத்தபமபாளையத்தில் 7 என மொத்தம் 18 கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
நிகழ்ச்சியில் கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பங்கேற்றனர்.