அரசு புறம்போக்கு நிலத்தில் தனியாக வசிக்கும் பெண்ணின் வீட்டில் தங்களுடைய பொருட்களை வைத்து வீட்டின் உரிமையாளர் கற்பகத்திற்கு கொலை மிரட்டல்
தேனி மாவட்டம், பெரியகுளம், பெருமாள்புரத்தில், கோடான்குளம் கரையில் கடந்த 15 வருடங்களாக அரசு புறம்போக்கு நிலத்தில் லேட் ராம்ராஜ் மனைவி கற்பகம் தனியாக குடியிருந்து வருகிறார்.
இவருடைய வீட்டில் உறவினர்கள் குமரேசன்,மகேஸ்வரி இருவரும் சேர்ந்து அத்துமீறி தங்களுடைய பொருட்களை வைத்துள்ளனர்.
இந்த பொருட்களை எடுங்கள் சொன்ன கற்பகத்திற்கு 5 நாட்களாக கொலை மிரட்டல் விடுவதோடு, ஆபாச வார்த்தைகளை பேசி வீட்டில் வைத்துள்ள பொருட்களை எடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அரசு புறம்போக்கு நிலத்தில் தனியாக வசித்து வரும் பெண் கற்பகம் செய்வது அறியாது தவித்து வருகிறார்.