போலி மருத்துவம் :பெண் மீது வழக்கு
ஆண்டிபட்டி : க.விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் தனபாண்டி மனைவி நித்தியா 41, மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இது பற்றி வந்த புகாரை தொடர்ந்து ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை முதுநிலை உதவி மருத்துவர் சுரேஷ்குமார், மாவட்ட நல வாழ்வு திட்ட அதிகாரிகள் மற்றும் மருந்தாளுனருடன் நித்தியா வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்துகள் ஆகியவற்றை கைப்பற்றினர். டாக்டர் சுரேஷ்குமார் புகாரில் க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நித்தியாவை தேடி வருகின்றனர்.