மதுராபுரியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்த முடிவு
தேனி: தேனியில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் பெரியகுளம் ரோடு மதுராபுரியில் பொதுக்கூட்டம் நடத்த அ.தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்விழா கூட்டம் மார்ச் 2ல் பெரியகுளம் சட்டசபை தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர்.
இதில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
பொதுக்கூட்டத்தை தேனி பங்களாமேட்டில் நடத்த முதலில் திட்டமிட்டனர்.
ஆனால், நகரில் மேம்பால பணி நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல், கூட்டம் முடிந்து கட்சியினர் திரும்புவதில் உருவாகும் போக்குவரத்து நெருக்கடி பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெரியகுளம் ரோடு மதுராபுரியில் பொதுக்கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகள் பாதுகாப்பு, அனுமதி கோரி போலீசில் மனு அளித்துள்ளனர்.