மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வருசநாடு, பிப். 24: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்க்கு உட்பட்ட கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அழகு சிங்கம், நாட்டு நல பணித்திட்ட அலுவலர் மகேந்திரன், கலால் துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கோட்ட கலால் அலுவலர் சாந்தப்பா, மருத்துவத்துறை சண்முக ரவி, சமூக நலத்துறை அலுவலர் பிரபாகரன், தமிழ் முதுகலை ஆசிரியர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மது, கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக மது போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.