சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு
போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு மலர் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில்,குலாலர் பாளையம்விநாயகர் கோயில்,திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
பெரியகுளம்: கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு, நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இந்திராபுரித் தெருவில் தையல் நாயகி, சிவனேஸ்வர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைநடந்தது.-