தேவதானப்பட்டி அருகே பாம்பு கடித்து இளைஞர் பலி
v
தேவதானப்பட்டி, பிப். 27: தேவதானப்பட்டி அருகே பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே அ.வாடிப்பட்டி ஊராட்சி அ.புதூரைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் மலைராஜா(22). இவர் கடந்த 21ம் தேதி தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கும் தனது தந்தை மலைச்சாமிக்கு சாப்பாடு கொண்டு சென்றார்.
அப்போது தோட்டத்தின் வரப்பில் நடந்து செல்லும் போது அங்கிருந்த பாம்பு மலைராஜாவை கடித்தது. இதனையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.