போடி, கேரளா பகுதிகளில் டூவீலர் திருடிய 4 பேர் கைது
போடி : கேரளா எர்ணாகுளம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் 35. இவர் மூன்று நாட்களுக்கு முன்பு பூப்பாறைக்கு டூவீலரில் வந்துள்ளார்.
அங்கு ரோட்டோரத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார்.
ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது டூவீலர் காணவில்லை. சாந்தாம்பாறை போலீசில் புகார் செய்தார்.
இது போல போடி முந்தலில் வசிப்பவர் செல்வகுமார் 30.
இவர் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள கே.டி எம். என்ற டூவீலரை நேற்று முன்தினம் வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்தி உள்ளார்.
வீட்டிற்குள் சென்று விட்டு வந்து பார்த்த போது டூவீலர் காணவில்லை.போலீசாரிடம் செல்வகுமார் புகார் செய்தார்.
குரங்கணி போலீசார் முந்தலில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவை பார்த்ததில் 4 பேர் டூவீலரை திருடி சென்றது தெரிந்தது.
விசாரணையில் தேனி அருகே முத்துதேவன் பட்டியை சேர்ந்த அஜய் 18. குணா 18, மதன் 18, விக்னேஷ் 18., என தெரிந்தது. சாந்தாம் பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருடி சென்ற ஒரு டூவீலரை கம்பத்திலும், மற்றொரு டூவீலரை முத்துதேவன் ட்டியலும் குரங்கணி, சாந்தாம்பாறை போலீசார் பறிமுதல் செய்தனர்.