மூணாறில் மெகா துாய்மை பணி
மூணாறு : கேரளாவில் ‘குப்பை இல்லா நவ கேரளம்’ எனும் திட்டத்தை அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி மூணாறில் ‘ ஜீரோ வேஸ்ட்’ எனும் மெகா தூய்மை பணி நேற்று முன்தினம் துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. அப்பணியில் ஊராட்சி, மின்துறை, மாவட்ட சுற்றுலாதுறை, ஹைடல் சுற்றுலா ஊழியர்கள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஊழியர்கள், தூய்மை, பசுமை பணியாளர்கள் உள்பட 160 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் ஒவ்வொரு குழுக்களாக பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை முதல் ரோடு, ஆறு ஆகியவற்றின் ஓரங்கள், பொது இடங்கள் உள்பட நகர் முழுவதும் பிளாஸ்டிக் உள்பட அனைத்து கழிவுகளையும் அகற்றி வருகின்றனர்.