சுற்றுலா தலங்களுக்கு எளிதில் செல்ல முடியாமல் சிரமம் தவிர்க்கும் உள்ளூர் பொதுமக்கள்
தேனி: மாவட்டத்தில் பல சுற்றுலா தலங்கள் இருந்தும் அங்கு எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி, சின்னசுருளி அருவி, குரங்கனி, கொட்டக்குடி மலைப்பகுதி, மேகமலை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
ஆனால், இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாவட்ட தலைநகரான தேனியில் இருந்து நேரடி பஸ் வசதி இல்லை.
ஆனால், அதே நேரத்தில் அண்டை மாநிலமான மூணாறு, குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர் பஸ் வசதி உள்ளது.
மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பெரும்பாலானவை வனப்பகுதிக்கு ஒட்டி உள்ளதால் அவற்றை மேம்படுத்துவதிலும் சிக்கல் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தேனியில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு நேரடி பஸ் வசதி, அணைகளில் படகு சவாரி உள்ளிட்டவற்றிற்கு ஏற்பாடு செய்தால் மாவட்டத்திற்கு சுற்றுலா வளர்ச்சி பெறுவதுடன் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சுற்றுலா இடங்களுக்கு அடிக்கடி பஸ் இயக்க விட்டால் கூட தினமும் காலை, மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வசதி செய்திட மாவட்ட நிர்வாகம், சுற்றுலா துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.