Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள், ஆள் மாறாட்டம் செய்து 33 சென்ட் நிலம் மோசடி

தேனி; பெரியகுளம் தாலுகாவில் 33 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து பவர் பத்திரம் பதிவு செய்து பிறரிடம் விற்ற மேல்மங்கலம் கட்டத்தேவன், மோசடிக்கு உடந்தையாக இருந்த ரவிசங்கர், ஈஸ்வரன், மீனா, சிவக்குமார், சப்பாணிமுத்து, சந்தகருப்பையா, குருசாமி, செல்வம் உட்பட 9 பேர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு, போலீசார் மோசடி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

வசிக்கிறார். இவரின் குடும்பத்தினரும், இவரது அத்தை சுப்புலட்சுமியின் குடும்பத்தினரும் சென்னையில் வசித்தனர். இந்நிலையில் மேல்மங்கலம் கட்டத்தேவனிடம், பெரியகுளம் பகுதியில் வாங்கிய 17 சென்ட் நிலத்தையும், வீட்டையும் கவனித்து வர நம்பிக்கையில் பாலவிஜய் ஒப்படைத்தார்.

கட்டத்தேவன், போலியான நபர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ஆவணங்களை தயாரித்து, பாலவிஜயின் 17 சென்ட் நிலத்திற்கு, பவர் ஆப் அத்தாரிட்டி’ பெற்று, அந்த நபரின் பெயரில் இருந்து காஞ்சிபுரம் அய்யம்பேட்டையை சேர்ந்த ரவிசங்கருக்கு கிரையம் முடித்து மோசடி செய்தார். அதன்பின் பாலவிஜயின் அத்தை சுப்புலட்சுமியின் மகன் சிவபாலனின் 16 சென்ட் நிலத்தையும் சேர்ந்து வேறு நபர்களின் பெயரில் கிரையம் பதிந்து, அபகரித்தார். பாதிக்கப்பட்ட பாலவிஜய்தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., யாழிசைசெல்வன் ஆகியோர் கட்டத்தேவன், அவர் போலி ஆவணங்கள் தயாரித்து, நிலத்தை பதிவு செய்ய உடந்தையாக இருந்த காஞ்சிபுரம் அய்யம்பேட்டை ரவிசங்கர், மதுரை நேரு நகர் ஈஸ்வரன்,அதேப்பகுதியை சேர்ந்த மீனா, சிவக்குமார்,மேல்மங்கலத்தை சேர்ந்த சப்பாணிமுத்து, சந்தகருப்பையா, குருசாமி, மதுரை வாடிபட்டியை சேர்ந்த செல்வம் உட்பட 9 பேர் மீது மோசடி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *