மின் கம்பியில் வீசப்படும் பூ மாலைகளால் மின்தடை
கூடலுார்: கூடலுாரில் மின் கம்பிகளில் பூமாலைகளை வீசுவதால் மழைக்காலங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது
கூடலுார் பொது மயானம் அருகே உயரழுத்த மின்கம்பி செல்கிறது. இதற்கு அருகில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்லும் மின் கம்பங்கள் உள்ளன.
இறந்தவர்களின் உடலை பொது மயானத்திற்கு அடக்கம் செய்வதற்காக கொண்டு வரும்போது மக்கள் பூமாலைகளை மின்கம்பிகளில் வீசிவிட்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மழைக்காலங்களில் காற்று வீசும் போது பூ மாலைகள் இரண்டு மின் கம்பிகளில் சிக்கி மின்தடை ஏற்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியில் தொங்கும் பூமாலைகளை அகற்றும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். அகற்றிய ஓரிரு நாட்களில் மீண்டும் பூமாலைகளை மின்கம்பியில் வீசுகின்றனர். இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் கானல் நிராகியுள்ளது.