கஞ்சா விற்ற இருவர் கைது.
தேனி; தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பூதிப்புரம் மகாலிங்கம் 27, தடை செய்த 60 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். மேல் விசாரணையில் பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த வீரலட்சுமியிடம் 43, கஞ்சாவை வாங்கி, இருவரும் பள்ளிக் கல்லுாரி மாணவர்களிடம் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.
இவரை கைது செய்து வீரலட்சுமியிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். கஞ்சா விற்பனையில் தொடர்புடைய பூதிப்புரம் ராஜபிரபு, அவரது தாயார் செல்வராணியை தேடி வருகின்றனர்.