விஷ விதை தின்று பெண் தற்கொலை
போடி, மார்ச் 13: போடி வஞ்சி ஓடை முதல் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி லட்சுமி(56). இவரது கணவர் இறந்துவிட்டார். குழந்தை இல்லாததால் போடி தங்க முத்தம்மன் கோயில் தெருவில் குடியிருக்கும் அண்ணன் சுதந்திரவேல் வீட்டில் வசித்து வந்தார். உடல்நல பாதிப்பால் கவலையில் இருந்து வந்த லட்சுமி, விஷ விதை தின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.