வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டியில் மாவட்ட அளவிலான வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடந்தது.
பொங்கல் விழா, துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க., தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடந்த போட்டியை ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் துவக்கி வைத்தார்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கருஞ்செவலை, யாகுத்து, தும்மர், ஜாவா, கதர்நுாரி, அப்ரோஸ், நாட்ரங்கு, பீலா வகைகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட சண்டை சேவல்கள் போட்டிகளில் பங்கேற்றன.
ஒவ்வொரு போட்டியும் 4 சுற்று போட்டிகளாக, 15 நிமிடம் சேவல்களுக்கான சண்டை, 15 நிமிடம் ஓய்வு என நடந்தது. வெற்றி பெற்ற சேவல்கள், உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன