Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

வேளாண் , தோட்டக்கலை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க எதிர்பார்ப்பு

கம்பம்; வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களுக்கு பொதுப்பயிர் மதிப்பீட்டாய்வு திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் பற்றிய புத்தாக்க பயிற்சி முன்கூட்டியே வழங்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் பொருளியல்,புள்ளியியல் துறை மூலம் வேளாண்,தோட்டக்கலை அலுவலர்களுக்கு பொதுப்பயிர் மதிப்பீட்டாய்வு புத்தாக்க பயிற்சி நடத்தப்படும்.

கடந்தாண்டு இப்பயிற்சி கோட்ட புள்ளியியல் துறை சார்பில் சின்னமனூர், கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் வழங்கப்பட்டது.

இரண்டு நாட்கள் நடந்த பயிற்சியில் கருத்தியல், களப்பயிற்சி, பொதுப் பயிர் அறுவடை பரிசோதனை குறித்து பயிர் வாரியாக விளக்கம், படிவங்கள் பூர்த்தி செய்து அனுப்புதல், உலர் பரிசோதனை விபரங்கள், புள்ளியியல் கணக்கீடு குறித்து பவர் பாயிண்ட் மூலமாக வட்டார புள்ளியியல் ஆய்வாளர்களால் விளக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் பயிற்சி நடத்தப்பட வேண்டும்.

ஆனால் கடந்தாண்டு மிகவும் கால தாமதமாக நடத்தினார்கள். எனவே இந்தாண்டு ஜூன் மாதம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

இப் பயிற்சியால் களப்பணியாளர்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

இது முக்கியமான பயிற்சி என்பதால் புள்ளியியல் துறை இப் பயிற்சி முன்கூட்டியே வழங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *