Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

சுருளி அருவியில் நீர் வரத்து இல்லை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கம்பம் : சுருளி அருவியில் கடும் வெயில் காரணமாக தண்ணீர் விழுவது முழுமையாக நின்றது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

சுருளி அருவி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருப்பதாலும், உயரமான மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் விழுவதாலும், மூலிகை தன்மை வாய்ந்ததாக நம்புகின்றனர். சின்ன குற்றாலம் என்றழைக்கப்படும் இந்த அருவியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பொதுமக்கள் சென்று குளித்து வந்தனர்,

மேகமலை புலிகள் காப்பகமாக மாறிய பின் வனத்துறை தனது கெடுபிடிகளை அதிகரித்தது. ஊராட்சி மற்றும் வனத்துறை சார்பில் நுழைவு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. கட்டணம் வசூலித்தாலும், நடப்பதற்கு ரோடு, வாகன வசதி, பாத்ரூம், உடை மாற்றும் அறை என அடிப்படை வசதி எதுவும் கிடையாது.

ஆண்டுதோறும் கோடையில் அருவியில் தண்ணீர் வரத்து நின்று விடும் . நேற்று முதல் அருவியில் தண்ணீர் விழுவது முழுமையாக நின்றது. இதனால் வழக்கமாக வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அருவியில் குளிக்காமல் செல்பவர்களும் நுழைவு கட்டணத்தை இரண்டு துறையினருக்கும் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இனி மழை பெய்தால் தான், அருவியில் தண்ணீர் விழும் என்கின்றனர். வறட்சி அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *