தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் தண்ணீர் பற்றாக்குறை : முத்தரப்பு கூட்டம் நடத்த கலெக்டர் முடிவு
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க குடிநீர் வடிகால் வாரியம், கல்லுாரி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து முத்தரப்பு அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவுஉட்பட 33 மருத்துவத்துறைகள் இயங்குகின்றன. தேனி மாவட்டம், கேரளாவில் இருந்து தினமும்2300 பேர்வெளிநேயாளிகளாகவும், 1800 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
மருத்துவக் கல்லுாரிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் லிட்டர்தண்ணீர் தேவை உள்ளது. இவை குடிநீருக்கும், பிற பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியம் திட்டம் 1ல் குன்னுார் வைகை ஆற்றில் உறைகிணறு அமைத்து அரப்படித்தேவன்பட்டி வழியாக குழாய் மூலம் 3 லட்சம் லிட்டர் நீரும், திட்டம் 2ல் வைகை அணையில் இருந்து 3 லிட்டர் என நாள் ஒன்றுக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் மருத்துவக்கல்லுாரிக்கு பம்பிங் செய்யப்படுகிறது. இதில் வைகை அணையில் இருந்து குழாய் மூலம் வரும் நீரை வழியிலே திருடி விவசாயத்திற்குபயன்படுத்துவதாக குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது.
இதுகுறித்து குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் தலைமையில் ஆய்வு செய்தபோது, வைகை அணையில் இருந்து வரும் பகிர்மான குழாய்கள்சேதமடைந்துள்ளது என்றும், அதில் விதிமீறி முறைகேடு நடப்பது குறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகத்தில் உள்ள 21 போர்வெல்களில் 19 போர்வெல்கள் செயல்படுகிறது. 2 போர்வேல்களை சீரமைக்கவும் பணிகள் துவங்கி உள்ளன.
கல்லுாரி முதல்வர் டாக்டர் முத்துசித்ரா மருத்துவக்கல்லுாரியில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி கலெக்டர்ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தார். மனுவை பரிசீலித்த கலெக்டர், விரைவில்குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட நிர்வாகம், கல்லுாரி நிர்வாக அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். மேலும், தண்ணீர் திருட்டு குறித்து ஆய்வில் தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.