பகலில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாதீங்க: டாக்டர் ‘ அட்வைஸ்’
கம்பம், : பகலில் பசு, காளை மாடுகள் மற்றும் எருமை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என கால்நடை டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதர்களை போன்றே மாடுகளுக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ தாக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக காலை 11:00 மணிக்கு மேல் மதியம் 3:00 மணி வரை கண்டிப்பாக வெட்ட வெளியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க கூடாது. மரங்கள் உள்ள தோட்டங்கள் அல்லது தென்னந்தோப்புகள் என்றால் பரவாயில்லை. வெட்ட வெளியில் மேய்ச்சலுக்கு விட கூடாது.
அப்படி மேய்ச்சலுக்கு விட்டால், தண்ணீர் குடிக்காது. தீவனம் உண்ணாது. மாலை நேரங்களில் குளிர்ந்த தண்ணீர் மற்றும் தீவனம் வைக்கலாம். பொதுவாக கோடையில் பால் உற்பத்தி குறையும். இந்தாண்டு வெப்பம் அதிகமாக இருப்பதால், கால்நடைகளை குறிப்பாக பசுக்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர்