தேனி அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி
தேனி, மார்ச் 25: தேனி-அல்லிநகரம் பள்ளிஓடைத்தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி(60). இவர் நேற்று முன்தினம் தேனி நகர் பொம்மையக்கவுண்டன்பட்டியில் தேனி-பெரியகுளம் மாநில நெடுஞ்சாலையில் நடந்து சென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக அதிகவேகத்தில் டூவீலரில் வந்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சண்முகபிரியனின் டூவீலர் வேலுச்சாமி மீது மோதியது.
இதனைத்தொடர்ந்து அவ்வழியாக டிவிஎஸ் 50ல் வந்த சுக்குவாடன்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி(55) வாகனம் மீது மோதியது. இதில் வேலுச்சாமி மற்றும் ஆண்டிச்சாமி காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு வேலுச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆண்டிச்சாமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இறந்து போன வேலுச்சாமியின் மகன் பால்பாண்டி அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் விபத்து ஏற்படுத்திய சண்முகபிரியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.