கால்பந்து, கிரிக்கெட் மைதானங்கள் திறப்பு விழா
தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.45 லட்சத்தில் அமைக்கப்பட்ட கால்பந்து, கிரிக்கெட் மைதானங்களை அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., மகாராஜன், கலெக்டர் ஷஜீவனா, ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்ட டூவீலர்கள், தையல் இயந்திரங்களை அமைச்சர் வழங்கினார்.