மரம் சாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி ரூ.29 லட்சம் இழப்பீடுக்கு உத்தரவு
மூணாறு: மூணாறு அருகே கல்லார் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிஜூ 37.
இவர், 2015 ஜூன் 15ல் அதே பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ரோட்டின் ஓரம் இருந்த மரம் சாய்ந்து இறந்தார். அச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று இடுக்கி கலெக்டர், மூணாறு வனத்துறை அதிகாரி, பொதுப்பணித் துறை பொறியாளர் ஆகியோர் இழப்பீடு வழங்க வேண்டும் என பிஜூவின் மனைவி தன்யா தேவிகுளம் துணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆன்டணி ஷெல்மான், கலெக்டர் பேரிடர் மேலாண்மை ஆணையர் பொறுப்பாளர் என்ற நிலையிலும், வனத்துறை அதிகாரி மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோர் ஆபத்தான மரத்தை வெட்டி அகற்றாததால் விபத்து ஏற்பட்டதால் இழப்பீடு வழங்க மூவரும் பொறுப்பு ஏற்று வட்டியுடன் ரூ.29 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.