இளைஞர் தற்கொலை
போடி: போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் சூர்யா 28. இவருக்கு 15 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், சூர்யா வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் துாக்கிட்ட நிலையில் இருந்துள்ளார்.
இதனை பார்த்த தந்தை மணிவேல் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே சூர்யா இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.
மணிவேல் புகாரில் போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.