பூட்டிய வீட்டில் நகை திருட்டு
பெரியகுளம் : சிறப்பு தொழுகைக்கு பள்ளிவாசல் சென்ற பெண்ணின் வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கப்பொருட்கள், பணம் திருடுபோனது
பெரியகுளம் தென்கரை மாதாகோவில் தெருவைச் சேர்ந்த சேக்மைதீன் மனைவி ரிஜ்வானா பாத்திமா 33. இரு ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இரு பிள்ளைகளுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார். ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு பிள்ளைகளுடன் சென்றார். வீட்டிற்குள் இவரது தந்தை தூங்குவதால் வெளியே தாழிட்டு சென்றார். தொழுகை முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பீரோ லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த ஒன்றரை பவுன் ஒரு ஜோடி தங்கத்தோடு, ஒரு கிராம் மோதிரம் 2, வெள்ளி கொலுசு, ரூ.8 ஆயிரம், அலைபேசி என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது. போலீசார் விசாரணையில் உத்தமபாளையம், சுருளிப்பட்டி மார்க்கெட் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் 20ஐ எஸ்.ஐ.,கைது செய்து அவரிடமிருந்து திருடு போன பொருட்களும் கைப்பற்றப்பட்டது.