வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்.10ல் துவக்கம்–
தேனி, : தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது. திருவிழா ஏப்.,10ல் துவங்குகிறது.
வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை முதல்நாள் நடக்கிறது. இவ்விழாவிற்கான கொடியேற்றும்விழா நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக் தலைமை வகித்தார். பூஜாரிகள் கொடியேற்றினர். விழாவை கோயில் செயல் அலுவலர் சுந்தரி, அறநிலைத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், தனலட்சுமி ஒருங்கிணைத்தனர்
விழாவில் அல்லிநகரம், பொம்மைகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக உற்சவர் அல்லிநகரத்தில் இருந்து ஊர்வலமாக மலைக்கோயில் சென்றார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏப்.,10ல் காவடி கலசத்துடன் வீதி உலாவுடன் துவங்குகிறது. ஏப்., 13ல் சுவாமி அல்லிநகரத்தில் இருந்து பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் செல்கிறார். மீண்டும் அன்றிரவு பங்களா மேட்டில் இருந்து அல்லிநகரம் புறப்பாடு நடக்கிறது. ஏப்.,14ல் மலைக்கோயிலுக்கு வீதி உலா, கோயிலில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடக்கிறது.