தேனியில் காங்., ஆர்ப்பாட்டம்
‘நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சொத்து பரிவர்த்தனையில் பண மோசடி நடந்துள்ளதாக மத்திய அமலாக்கத்துறை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது. அதில் லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா ஆகியோரின் பெயர்களை சேர்த்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேனி வருமான வரித்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகரத் தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, பொருளாளர் பாலசுப்ரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சம்சுதீன்வரவேற்றார். எஸ்.சி.எஸ்.டி., பிரிவு மாவட்டத் தலைவர் இனியவன், மாவட்டச் செயலாளர் அபுதாஹீர், வட்டாரத் தலைவர்கள் முருகன், அம்சாமுகம்மது, ரவீந்திரன், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி மறுவரையறை பொறுப்பாளர் சின்னப்பாண்டி, போடி சட்டசபை தொகுதி மறுவரையறை பொறுப்பாளர் சதாசிவம் உளளிட்டோர் பங்கேற்று, கோஷங்களை எழுப்பினர்.