அய்யப்ப பக்தர்களிடம் லேப்டாப், மொபைல் திருடிய மூவர் சிக்கினர்
கம்பம்: தேனி, சுருளி அருவியில் குளிக்க அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் அருகே செஞ்சியில் இருந்து வேனில் வந்த அய்யப்ப பக்தர்கள் வேனை பூட்டி விட்டு அருவிக்கு குளிக்கச் சென்றனர். திரும்பி வந்த போது, கண்ணாடி உடைக்கப்பட்டு, வேனில் இருந்த லேப்டாப், மூன்று மொபைல் போன்கள், பணம் திருடப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக, செஞ்சி தீனதயாளன் ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில், சென்னை, குன்றத்துாரில் இருக்கும், தேவாரம் அருகே கிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்த சாரதி 19, லட்சுமி நாயக்கன்பட்டி, 17 வயது சிறுவன், முத்துக்குமார், 22, ஆகியோரை கைது செய்து, லேப்டாப், மூன்று மொபைல் போன்களை மீட்டனர்.
சிறுவன், மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். சாரதி, முத்துக்குமார் ஆகியோர் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.