குடிநீர் கேட்டு ரோடு மறியல் போக்குவரத்து பாதிப்பு
உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி அருகே காக்கில்சிக்கையன் பட்டியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு உத்தமபாளையம் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் அனுமந்தன்பட்டி, கோவிந்தன்பட்டு, காக்கில்சிக்கையன் பட்டி உட்கடை கிராமங்கள் உள்ளன. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காக்கில்சிக்கையன்பட்டி, கோவிந்தன்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய வில்லை. இதனால் குடிநீர் இல்லாமல், தோட்ட கிணறுகளுக்கு சென்று தண்ணீர் சுமந்து வந்தனர்.
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நேற்று முன்தினம் காலை காக்கில் சிக்கையன்பட்டி பொது மக்கள் உத்தமபாளையம் கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தேனி குமுளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்தமபாளையம் போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். குடிநீர் மெயின் பகிர்மான குழாய் உடைந்ததால் குடிநீர் சப்ளையில் தேக்க நிலை ஏற்பட்டதாக பேரூராட்சி சார்பில் விளக்கமளித்தனர்.