இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
”இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது” என பிரதமர் மோடி பேசினார்.
பல்வேறு அரசுத் துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய இளைஞர்களின் வளர்ச்சி மிகவும் பாரட்டுகுரியது. பெண்களும் படிப்பில் முன்னேறி உள்ளனர்.
இன்று, 51,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் நிலையான அரசு வேலைகளுக்கான நியமன ஆணையை பெற்றுள்ளனர். நாட்டின் பொருளாதாரம், உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவருவது உங்கள் பொறுப்பு.
உங்கள் வேலையில் நீங்கள் எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்களோ?
அவ்வளவுக்கு அது இந்தியாவின் வளர்ச்சிக்கான பயணத்தில் உதவியாக இருக்கும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்று ஐ.எம்.எப்., சமீபத்தில் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் துறையில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.