Thursday, May 8, 2025
தமிழக செய்திகள்

தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல; முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது.

இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.

பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *