முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது. பின்னர், நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது. இந்நிலையில் இன்று இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இன்று நண்பகல் 12 மணிக்கு இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் தலைமை இயக்குநர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த சூழலில், டில்லியில் பிரதமர் மோடி அவரது இல்லத்தில், முப்படை தலைமை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
எல்லையில் தற்போதைய சூழல் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது.
பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையின் போது, பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என ராணுவ அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டதாக டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.