Wednesday, May 14, 2025
தமிழக செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!

தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் 10ம் தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், மே 19ம் தேதிக்கு பதிலாக முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அதே நாளில் 11ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *