ரஷ்யாவில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
மாஸ்கோ: ரஷ்யாவில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. காகசஸ் மகாணம் தாகெஸ்தானில் தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றபோது தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். வேறு சில தேவாலயங்கள் மற்றும் போலீஸ் நிலையங்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். பதிலுக்கு ராணிவம் நடத்திய துப்பக்கிச் சூட்டில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.