Wednesday, April 16, 2025
2கல்வி3சுற்றுலா4ஆரோக்கியம்Uncategorizedஆன்மீகம்இந்தியாஉலகம்சினிமாதமிழக செய்திகள்மற்றமாவட்ட செய்திகள்விளையாட்டுஜோதிடம்

பத்திரிகையாளர் மரணம் : சவுதி அரேபியா கடுமையான விளைவுகள சந்திக்க நேரிடும் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை

பத்திரிகையாளர் ஜமால் கசோகி மாயமான விவகாரத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு, சவுதி அரேபியா 100 மில்லியன் டாலர் நிதியை அனுப்பியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜமால் கசோகி விவகாரத்தில் துருக்கி அரசிடம் ஆதாரங்கள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அமெரிக்காவின் கோபத்தில் இருந்து தப்பவே 100 மில்லியன் டாலர் தொகையை சவுதி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ரியாத் வந்த நாளில், சவுதி அரேபியாவால், அமெரிக்காவுக்கு இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இவ்வழக்கு தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டு ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று உறுதியாகக் கூறி வந்த நிலையில் வீடியோ மற்றும் ஓடியோ ஆதாரத்தை வெளியிட்டது.இதனைத் தொடர்ந்து, ஜமால் கொலை செய்யப்பட்டது உறுதியானால் கடுமையான தண்டனைகளுக்கு சவுதி உள்ளாக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், சவுதியை இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கடுமையாக விமர்சித்துள்ளன.தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த சவுதி, எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதைவிட கடுமையான எதிர்வினையை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டி வந்தது.
இந்த விவகாரத்தில்  விளைவுகள சந்திக்க நெரிடும்  டொனால்டு டிரம்ப் சவுதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அவர் கூறும் போது .இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போனவர், இனி உயிருடன் இருக்கும் வாய்ப்பு  இல்லை.  இது கவலை அளிக்கிறது.இந்த விவகாரத்தில் சவுதி அரேபியாதான் காரணம் என்றால் கடுமையான விளைவுகள சந்திக்க நேரிடும்   மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டும்.இது  மிகவும் மோசம், என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *