Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

தேனியும் தேசிய நெடுஞ்சாலையும் … பொறியாளர்களின் அலட்சியத்தால் நடக்கும் உயிர் பலிகளும்….. தடுக்குமா நெடுஞ்சாலை நிர்வாகம்…

தேனி மாவட்டம் பெரும்பாலும் இயற்கையும் எழில் சூழ்ந்த மாவட்டம். இயற்கையில் எழில் சூழ்ந்த இன்னொரு மாவட்டம் கோவை மாவட்டம் ஆகும். கோவையில் தொழிற்புரட்சி அப்போ இருந்து இப்ப வரைக்கும் நடந்துகிட்டுதான் இருக்கு. அந்த மாவட்டம் வளந்துகிட்டுதான் இருக்கு. ஆனா தேனி மாவட்டம் அப்ப இருந்து இப்ப வரைக்கும் வளரவே இல்ல. இத்தனைக்கும் பல முதல்வர்கள் களம் கண்ட மாவட்டம்.

ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி என்பது அந்த மாவட்டதில் அமைக்கப்படும் சாலைகள் வசதியை பொறுத்துதான் அமைகிறது. 73 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் இப்ப வரை நான்கு வழிச்சாலை கூட போடாமல் இரண்டு வழிச்சாலை அமைத்து அதற்கு சுங்க வரி வசூலிக்கும் ஒரே மாவட்டம் தேனி மாவட்டம்தான். போடப்பட்ட இந்த இரண்டு வழிச்சாலை படுமோசம்… பல்வேறு இடங்களில் விபத்து உருவாகும் சூழல் உள்ளது அது பற்றிய சிறு தொகுப்புதான் இது.

மோசமான சாலை திட்டம் 1….
போடி விளக்கு சந்திப்பு….

தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையும் போடி சாலையும் இணைக்கும் சந்திப்பு ரொம்பவும் அலட்சியமா போடப்பட்ட சாலை..அந்த சந்திப்பில் இப்ப வரைக்கும் 10 க்கு மேற்பட்ட உயிர் பலி ஆகி இருக்கு…மக்களோட கடுமையான விமர்சனத்துக்கு பிறகு ரவுண்டானா அமைச்சு இருக்காங்க…அதுவும் படுமோசம்.முறையான தகவல் அமைப்பு இல்லை.

மோசமான சாலை திட்டம் 2 ….பூதிபுரம் மேம்பாலம்…

எனக்கு தெரிஞ்ச மேம்பாலங்களில் இவ்வளவு மோசமான திட்டம் கொண்ட ஒரே மேம்பாலம் இந்த பூதிபுரம் மேம்பாலம். இந்த மேம்பாலம் ஒரு பக்கம் தடுப்பு அறை ஆள் உயர தடுப்பு கட்டி இருக்காங்க..இன்னொரு பக்கம் முழங்கால் அளவு உயர பேருக்கு கம்பி தடுப்பு போட்டு இருக்காங்க…இது பல உயிர்களை பலி வாங்க காத்து இருக்கு.இது ஊழல் வெளிப்பாடு மாதிரி இருக்கு… இங்க பெரிய பேருந்து கவுந்து உயிர்பலி ஆக வாய்ப்பு அதிகமா இருக்குன்னு சொல்லலாம். விபத்து எதுவும் நடந்தா கொஞ்சம் நாள் விவாதிச்சு அதுக்கு பிறகு சரி பண்ணுவாங்க போல… விபத்து நடந்த அன்னைக்கு மட்டும் ஆட்சியர் தலை உருளும்….

மோசமான சாலை திட்டம் 3… Atk மில் அருகே போடப்பட்ட மேம்பாலம் ..

அந்த மேம்பாலம் போடப்பட்டதில் இருந்தே பேட்ச் வொர்க் மட்டும் அதிகம் பாத்து இருக்காங்க…அந்த பக்கம் வண்டியில வேகமா போற ஒவ்வொரு வாகன ஓட்டிகும் திடீர்னு பள்ளத்த்துல விட்டு எந்திருசிருப்பாங்க.
சமீபத்தில் தினசரி நாளிதழ் கூட செய்தி வெளியிட்டார்கள் .
ஆனா என்ன சரி பண்ண மாதிரி தெரியல.

மோசமான சாலை திட்டம் 4..வீரபாண்டி மேம்பாலம் ..

புதிதாக போடப்பட்ட மேம்பாலம் அதுல ஒரு பள்ளம் உருவாகி அதை இப்ப வரைக்கும் பேட்ச் வொர்க் பார்க்கிறாங்க…சரி பண்ணினாங்க தான் தெரியல.

முன் அறிவிப்பு இல்லாத இணைப்பு சாலைகள்….

தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், போடப்பட்டுள்ள பெரும்பாலான இணைப்பு சாலைகள், முறையாக போடல. சரியான தகவல் அமைப்பு இல்லை. போக்குவரத்து அதிகம் ஆகும் போது இங்க பல விபத்து நடக்க வாய்ப்பு இருக்கு ..

கோர விபத்து நடந்தால் நெடுஞ்சாலை துறைதான் பொறுப்பு…

தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து நடந்தால் அது நெடுஞ்சாலைத்துறை தான் பொறுப்பு. அதில் இருக்கும் அதிகாரிகள் கொஞ்சம் பொறுப்புடன் ஆய்வு செய்து விபத்து நடக்கும் முன் மக்களை காக்கும் முயற்சிகள் செய்ய வேண்டும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *