சீரமைக்காத தெருவால் பாதிக்கும் மக்கள்
கூடலுார்: கூடலுார் 20வது வார்டு சுண்ணாம்புக்காரத் தெரு பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு தார் ரோடு அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக கழிவு நீரோடை கட்டப்பட்டது. ஆனால் மூன்று மாதங்களாகியும் இதுவரை தார் ரோடு அமைக்கவில்லை. கற்குவியல்கள் அதிகமுள்ள இத்தெருவில் இரவில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ரோடு அமைக்க டெண்டர் எடுத்த கான்ட்ராக்ட்தாரர்களை உடனடியாக பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.