மாணவர் சங்க தலைவர் தேர்தல் கம்ப்யூட்டர் மூலம் ஒட்டுப் பதிவு
போடி ஸ்பைஸ் வாலி பப்ளிக் பள்ளியில் மாணவர் சங்கத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் பள்ளி நிர்வாக அலுவலர் பிச்சை தலைமையில் நடந்தது.
முதல்வர் சபானா பர்வீன் முன்னிலை வகித்தார். தலைவர் பதவிக்கு ஒரு மாணவர், 2 மாணவிகளும், துணை தலைவர் பதவிக்கு 3 மாணவர்கள், 6 மாணவிகளும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 700 ஓட்டுகள் உள்ளன.
மாணவர் தலைவர் தேர்தல் முதன் முறையாக கம்ப்யூட்டர் மூலம் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டு பதிவுக்கான கம்ப்யூட்டரை ஆசிரியர் ராம அரங்ககிருஷ்ணன் உதவியுடன் 10 ம் வகுப்பு மாணவர்கள் ஐடின் சபரி, கோகுல் மித்ரன் செய்திருந்தனர்.
கம்ப்யூட்டரில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், போட்டோ, சின்னம் பொருத்தப்பட்டு இருந்தன.
பொதுத் தேர்தல் போன்று தங்களுடைய அடையாள அட்டையை காண்பித்தும், பெயரை சரிபார்த்தும், கைவிரலில் மை வைத்தல், பின்னர் கம்ப்யூட்டரில் ஓட்டுப்பதிவு செய்தனர்.
தேர்தல் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த நடை முறை பின்பற்றப்படுகிறது.
பதிவான ஓட்டுகளின் முடிவு ஜூலை 12 ம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்று பதவி ஏற்பு விழாவும் நடைபெறும் என பள்ளி முதல்வர் தெரிவித்தார்.
தேர்தல் பணியில் பள்ளி ஆசிரியர்கள் கலைச்செல்வி, ஜிஜிமோன் ஜோசப் ஆகியோர் செய்திருந்தனர்.