நலத்திட்ட உதவிகள் வழங்க பயனாளிகள் தேர்வு
சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்க பயனாளிகள் தேர்வில் அரசுத்துறையினர் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளனர்.
நாளைக்குள் (ஆக.,13) பயனாளிகள் பட்டியலை வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் 6 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். மேலும் போலீசார் அணிவகுப்பு மரியாதை, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மாரியாதை செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. விழாவில் அரசு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு சான்றிதழ், நலத்திட்டங்களில் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அலுவலர்கள், பயனாளிகள் தேர்வில் அரசு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேர்வு செய்த பட்டியலை நாளைக்குள் வழங்க வேண்டும் என, கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.