தமிழக நீச்சல் அணிக்கு தேர்வு தேனி மாணவி
தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி நிசாதமித்ரா தமிழக நீச்சல் அணிக்கு தேர்வாகி உள்ளார்.
சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் மாநில அளவிலான ஜூனியர் நீச்சல் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நிசாதமித்ரா, யோகசங்கமித்ரா, வேலம்மாள் பள்ளி மாணவி ஜெமிமா பங்கேற்றனர். இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நிசாதமித்ரா 200 மீ., பட்டர்பிளையில் தங்கம், 800 மீ ப்ரீஸ்டெயில் போட்டியில் வெள்ளி, 100மீ, 50மீ., பட்டர்பிளை போட்டியில் வெண்கலம் வென்றார். வெற்றி பெற்ற மாணவி நிசாதமித்ரா தமிழக நீச்சல் அணிக்கு தேர்வாகி உள்ளார்.
இவர் ஆக., 6முதல் 11 வரை ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக அணி சார்பில் பங்கேற்கிறார். வெற்றி பெற்ற மாணவியை நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.