மூன்று ஐயப்ப பக்தர்கள் வாகனம் மோதி காயம்
கூடலுார்: எருமேலி அருகே பம்பாவலியில் திருச்சி தத்துங்கல்பேட்டையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சரவணன் 37, சங்கர் 35, சுரேஷ் 39, ஆகியோர் ரோட்டோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
சபரிமலை சென்று தரிசனம் முடித்து திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வாகனம் முன்னாள் சென்ற பஸ்சில் மோதி அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தது. இதில் மூன்று பக்தர்களும் பலத்த காயமடைந்தனர்.
கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எருமேலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.