புதிய பாரத எழுத்தறிவு திட்ட துவக்க விழா
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 14 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கற்றல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தாண்டிற்கான முதற்கட்ட பயிற்சி துவக்க விழா தேனி தென்றல் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் மோகன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசினார்.
முற்கட்ட பயிற்சி வகுப்புகள் நவம்பர் முதல் வாரத்தில் முடிவடைகிறது. இந்த திட்டத்தில் தேனி வட்டாரத்தில் 1050 பயனளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களக்கு 72 தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படஉள்ளது. துவக்க விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ராஜலட்சுமி, ராஜேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியை சித்ரவிநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.