அரசு பொதுத்தேர்வு எழுத தயாராகும் 42 ஆயிரம் மாணவர்கள்
தேனி: மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1,பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு எழுத உள்ள 42ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பட்டியல் தயாராகி உள்ளது.
மாவட்டத்தில் அரசு, உதவி பெறும், தனியார் உயர்நிலைப்பள்ளிகள் 66, மேல்நிலைப்பள்ளிகள் 156 செயல்படுகின்றன. இங்கு படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் வருகின்ற மார்ச், ஏப்ரலில் அரசுப்பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3, பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 5, பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ல் துவங்குகிறது. பொதுத்தேர்விற்கான செய்முறைத்தேர்வுகள் அடுத்தமாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 15,201 பேர், பிளஸ் 1 படிக்கும் 13,941 பேர், பிளஸ் 2 படிக்கும் 13,829 பேர் என மொத்தம் 42,971 மாணவ, மாணவிகள் அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களின் விபரங்கள், பள்ளி வருகை உள்ளிட்டவை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.